Friday, March 19, 2010

சிலையின் புல‌ம்ப‌ல்

க‌ன்ன‌ம் தொடுவ‌தும்
இடைக் கிள்ளுவ‌தும்
ஆறிய காய‌த்தில்
சின்ன‌தாய் கீறல்..

எனை சிரித்த‌ப‌டி
செதுக்கிய‌தால்
அழுவ‌து தெரிவதே இல்லை..

கைகால் அசையாத‌
கர்ப்ப‌கிர‌க‌ சிலையை
பார்ப்ப‌வ‌ரெல்லாம்
வேண்டி செல்கிறார்க‌ள்..
இது வேண்டும்..அது வேண்டுமென

நான் கூட‌ ப‌ர‌வாயில்லை ‍‍
போலிருக்கிற‌து..!!

செதுக்கிய‌வ‌ன்
காய‌ப்படுத்திய‌தில்
ந‌டை'முறை'ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து
இன்றைய‌ க‌லாச்சார‌ம்..

குறிப்பு:என‌து ந‌ண்ப‌ர் ஜானிபிர‌காஷ் எழுதிய‌ இர‌ண்டுவ‌ரி க‌விதையில் அழாம‌ல் பிறந்த‌து இந்த‌ குழ‌ந்தை
ந‌ன்றி!! ஜானி
 

2 comments:

ஜானி பிரகாஷ் said...

அன்பு நண்பர் ஜெயராம்.. அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....
நான் அந்த இரண்டு வரி கவிதையை எழுதியதற்காக பெருமை படுகிறேன் , காரணம் கடந்த ஓராண்டு கால உங்களின் மௌனத்தை களைத்திருக்கிறது அந்த வரிகள் . சிலையின் புலம்பலில் சிலை உங்களிடம் புலம்பியவற்றை அழகாக பதிவு செய்துள்ளிர்கள் . எனக்கு பின் நான் கண்ட சிலையிடம் நீங்களும் புலம்பல் கேட்டது போல் இருக்கிறது உங்கள் வரிகள். இருந்தாலும் அந்த பொல்லாத சிலை உங்களிடம் அதிகம் புலம்பி இருக்கிறது ...அழகு ..இன்னும் எழுதுங்கள் ..

வாழ்க தமிழ்
ஜானி பிரகாஷ்

saradha said...

after a long..... gap again i saw...

lots of time i check ur blog and gets angry bcz u didnt update!!!

now ur silence comes to end i hope strongly!!!!

thank u!!!!!!